0 comments



ஆட்டம் 2


A profile of Mark Zuckerberg


Mark Zuckerberg அண்மைக்காலமாக இணையப்பக்கம் அடிக்கடி அடிபடும் ஒரு பெயர்.
காரணம் இன்றைய தேதியில் உலகிலேயே மிக அதிக வரவேற்பைப் பெற்ற facebook
இணைய தளத்தின் ஸ்தாபகர் இவர்தான். 26 வயதான இவர் மிக இளம் வயது
பில்லியானர்களில்[~04 பில்லியன் ] ஒருவர். இவரைப் பட்டிய தகவல்களைப் படிக்கும் போது
ஒவ்வொரு விஷயத்திலும் வியக்க வைக்கிறார் மனிதர்.


இவரது இயற் பெயர் Mark Elliot Zuckerberg.
may-14 -1984 இல் White Plains, New York இலே பிறந்தார்.
அடிப்படையில் இவர் ஒரு யூதர். பாடசாலைக் காலத்திலேயே ப்ரோக்ராம் எழுத ஆரம்பித்த
இவர் தொடர்ந்து கணணி மென்பொருள்களை develop சைவத்தில் ஆர்வம் காட்டினார்
சிறு வயதிலேயே அவர் தந்தையின் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்காக ஒரு
ப்ரோக்ராமை உருவாக்கினார். Risk என்ற ஒரு game version, Synapse என்ற music player போன்றவற்றையும் சிறுவயதிலேயே உருவாக்கினார். இந்த synapse பயனாளிகளின் கேள்தகவை
செயற்கை நுண்ணறிவு மூலம் உணரக்கூடியதாக அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதன் உரிமையை வாங்கவும் Zuckerberg ஐ தம்மோடு இணைத்துக்கொள்ளவும் மைக்ரோசாப்ட் மற்றும் aol போன்ற
நிறுவனங்கள் போட்டி போட்டன. இருந்தும் alpha epsilonpi என்ற யூத சகோதரத்துவ அமைப்பின்
உதவியுடன் Harvard University இல் தன்னை இணைத்துக் கொண்டார்.

face book இன் உருவாக்கம்

oct -28 -2003 அன்று தன்னை பிரிந்த தான் காதலியின் நினைவுகளை மறக்க ஏதாவது செய்ய வேண்டிய
கட்டாயத்தில் இருந்தார். அதனால் தான் வலைப்பூவை திறந்து எழுத ஆரம்பித்தார்.


நான் பொய் சொல்ல விரும்ம்பவில்லை. இப்போது கொஞ்சம்
குடித்திருக்கிறேன் இன்று வியாழன் இரவு 10 pm. என் கணனியில் face புக்
[ Harvard University இல் மாணவர் மற்றும் ஆசிரியர் பட்டிய விபரங்கள்
அடங்கிய கோவையை facebook என்று அழைப்பார்கள் ]திறக்கப்பட்டுள்ளது. இதிலே உள்ள
படங்களுக பக்கத்தில் பண்ணை விலங்குகளின் படங்களை போடா விரும்புகிறேன்.
-9.48 pm

ஆம் விலங்குகளின் படங்கள் சரியாக பொருந்துமா என உறுதியாக
சொல்ல முடியாது. ஆனால் எனக்கு இந்த ஒப்பிடும் விளையாட்டு மிகவும்
பிடித்திருக்கிறது.
-11.09 pm

let the hacking begins
-12.58 pm

மாணவர்கள் பயன்படுத்தியிருந்த படங்களில் சிலவற்றை தெரிந்தெடுத்து அவற்றை இரண்டிரண்டாக ஒழுங்குபடுத்தி
அதில் அழகானவரை தெரிந்தெடுக்கும் போட்டி ஒன்றை உருவாக்கினார் zuckerberg . இதற்காக university இன் பாதுகாக்கப்பட்ட வலையமைப்பை hack செய்தார். ஐந்தே விலையாட்டால் 450 பயனாளிகளைக்கொண்ட ஒரு தளம் உருவாகியது.4 மணி நேரத்தில் 22 ,000 படங்கள் பகிரப்பட்டன. இதுவே பிற்காலத்தில் face book உருவாக பிரதான வாயிலாக அமைந்தது. இது harvard முழுவதும் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது.

எனினும் பாதுகாப்பு விதிகளை மீறியமை, அனுமதியின்றி வ்ளையமைப்பிட்குள் உட் புகுந்தமை போன்ற குட்டச்சாட்டுகளை முன்வைத்து harvard அந்த தளத்தை தடை செய்தது. பின்னர் அதன் வரவேற்பை உணர்ந்து தடையை நீக்கியது.

தொடர்ந்து zuckerberg தன் வலைத்தளத்தை விஸ்தரிக்க ஆரம்பித்தார். jan 2003 இல் அதற்கான coding வேலைகளை ஆரம்பித்தார். feb -04 -2004 இல் face book உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்டது. இதன் முகவரி thefacebook .com ஆக அமைந்திருந்தது. அன்றிலிருந்து அடுத்த 24 மணி நேரத்தில் 1200 -1500 பேர் வரை தம்மை பதிவு செய்தனர்.

பின்னர் harvard அதனை அனைவரும் பயன்படுத்த அனுமதி அளித்தது. இப்போது 13 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதனை பயன் படுத்தே முடியும்.

இந்த face book மூலம் Mark Zuckerberg என்ற இளைஞன் உஅகம் திரும்பிப் பார்க்கும் ஒருவனாக இன்று மாறியுள்ளான். ஏன் கணணி உலகின் அடுத்த bill gates ஆக இவரே மாறினாலும் ஆச்சர்யப்படுவதட்கில்லை.
                                                                                                                                       ஆட்டநாயகன்